search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான்கடே மைதானம்"

    120 கோடி ரூபாய் பாக்கி தொகையை கட்டிவிட்டு, ‘லீஸ்’ ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள். அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
    மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானம் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்று. இந்த மைதானம் 43,977.93 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடுப்பட்டுள்ளது. இந்த மைதானம் மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமானது. இதை 50 வருடத்திற்கு முன்பு மும்பை கிரிக்கெட் சங்கம் லீஸ்க்கு வாங்கியது.

    இந்த லீஸ் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் புதுப்பிக்கவில்லை. அத்துடன் மகாராஷ்டிரா அரசுக்கு 120 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.



    இந்நிலையில் 120 கோடி ரூபாய் பாக்கி பணத்தை கட்டுங்கள். அதன்பின் லீஸ்-ஐ புதுப்பியுங்கள். அல்லது மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    நோட்டீஸ் அனுப்பிய மும்பை நகர கலெக்டர் இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திற்குக் கூறுகையில் ‘‘பாக்கி தொகை நிலுவை குறித்த பிரச்சனை இருக்கும்போதே, மும்பை கிரிக்கெட் சங்கம் லீஸ்க்கு விண்ணப்பித்துள்ளது. அவர்களுடைய பெருமையை பார்க்கும்பொழுது 120 கோடி ரூபாய் சிறிய தொகைதான். இடைக்கால கூட்டமோ அல்லது கால நீட்டிப்போ கிடையாது. மே 3-ந்தேதி கூட்டத்திற்குப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’’ என்றார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது #IPL2019 #MIvDC

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் இது 700-வது ஆட்டமாகும்.

    ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் டெல்லியை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிரித்வி ஷா (7 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (16 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் காலின் இங்ராமும், ஷிகர் தவானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இங்ராம் 47 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்தனர்.

    இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ரிஷாப் பான்டுவின் வாணவேடிக்கையால் டெல்லி அணி 200 ரன்களை எளிதில் கடந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 21 வயதான ரிஷாப் பான்ட் 78 ரன்களுடன் (27 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 27 ரன்னிலும், பொல்லார்ட் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

    மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ×